Skip to product information
1 of 2

Aaranya Pasumaikudil

Mudavattukal Kilangu Soup Powder முடவாட்டுக்கால் கிழங்கு சூப் பொடி

Mudavattukal Kilangu Soup Powder முடவாட்டுக்கால் கிழங்கு சூப் பொடி

Regular price Rs. 700.00
Regular price Sale price Rs. 700.00
Sale Sold out
Shipping calculated at checkout.
Pocket

வெளிநாடு வாழ் மக்களுக்காகவும்  நேரடியாகக் கிழங்கை சூப் வைத்து குடிப்பதில் சிரமம் உள்ளவர்களுக்காகவும் முடவாட்டுக்கால் கிழங்கு இன்ஸ்டன்ட் சூப் பொடியாகத் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த சூப் பொடியைக் கொண்டு சில நிமிடங்களில் சூப் போட்டுக்குடிக்கலாம். 100 கிராம் கொண்ட இந்த சூப் பொடி பாக்கெட்டில்  25 சூப் தயாரிக்கலாம்.  எளிய முறையில் யார் வேண்டுமானாலும் தயாரிக்க முடியும். 

சூப் தயாரிக்கும் செய்முறை 

முடவாட்டுக்கால் கிழங்கு சூப் பொடி 4 கிராம் (ஒரு ஸ்பூன் அளவு) எடுத்துக் கொள்ளுங்கள். சூப் பொடியுடன் 300 மில்லி லிட்டர் தண்ணீர் (இரண்டு டம்ளர்) ஊற்றி நன்கு/ கொதி வந்ததும் பத்து நிமிடங்கள் சிம்மில் வைக்க வேண்டும். இறக்கி வடிகட்டி நல்லெண்ணெய் அரை ஸ்பூன் சிறிது கொத்தமல்லி இலை கிள்ளிப் போட்டு குடிக்கவும். 

பின் குறிப்பு 

தேவையான அனைத்து மசாலா சேர்மானங்களும் சேர்ந்தது.  இதில் சேர்க்கப்பட்டுள்ள உப்பு  பிங்க் சால்ட் எனப்படும் இந்துப்பு ஆகும். காரத்திற்கு  மிளகு மட்டுமே  அவரவர் உப்பு, உறைப்பு சுவைக்கேற்ப  தண்ணீர் அளவு அதிகம் குறைவு செய்து கொள்ளலாம்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்கள் 

இந்தப் பொடியை அறை வெப்பநிலையில்  ஐந்து மாதங்கள் வரையிலும், ஃப்ரிட்ஜில் பத்து மாதங்கள் வரையிலும் வைத்திருந்து உபயோகிக்கலாம்.

ஒரு நாளின் எந்த நேரத்திலும் அருந்தலாம்.  காலை 11 மணிக்கு அல்லது மாலை 5 மணிக்கு எடுப்பது சிறப்பு.  தொடர்ந்து 48 நாட்கள் அருந்தினால் மிகவும் நல்லது.  தொடங்கியப் பிறகு நடுவில் ஏதாவது காரணமாக ஓரிரு நாட்கள் விடுபட்டால் கவலை வேண்டாம், மீண்டும் தொடரலாம். 

இந்த சூப்பை தொடர்ந்து அருந்தினால் வலி   குறைந்து விடுமா என்றால்  பெரும்பாலானவர்களுக்கு  நிச்சயமாக குறைந்து விடும்.  உங்கள் மூட்டுகளில் பெரும் தேய்மானம் அல்லது வேறு பிரச்சினைகள் இல்லாமல் இருக்கும் பட்சத்தில் வலி  சில நாட்களிலேயே  குணமாவதைக் கண்கூடாகக் காணலாம் 

கிட்னி டயலிஸிஸ் பேஷன்ட் தவிர மற்ற அனைவரும் தாராளமாக எடுக்கலாம். ஒபிசிட்டி, சர்க்கரை டயாபட்டிக், ரத்த அழுத்தம் இருந்தாலும் இதைச் சாப்பிட  நல்ல முன்னேற்றம் தெரியும்


View full details